செய்முறை
மைதா மாவு, கோதுமை மாவு மற்றும் ராகி மாவு ஒன்றாக சேர்த்து பி.எஸ்.60 வலை சல்லடையில் சலித்து 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். ஆறவைத்து மறுபடியும் சலிக்கவும்.
பிழியப்படும் இயந்திரத்தில் மாவு பிசையும் பகுதியில் இக்கலவையை தண்ணீரி மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடம் பிசைய விடவும். பின்பு சேமியா அச்சு வழியாக பிழியவும். பிழியப்பட்ட சேமியாவை 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். சேமியா விரைப்புத் தன்மை பெற 8 மணி நேரம் அறை வெப்பநிலையில் வைத்து பின்பு உலர்த்துவானில் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 6 மணி நேரம் உலர்த்தவும்.
|